கேளிக்கை

டிரைலர் இல்லாமல் வருகிறான் மெர்சல் அரசன்…



அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படம், டிரைலர் இல்லாமல் நேரடியாக படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் மேலும் youtube இல் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

அதேநேரம் படக்குழுவினர்கள் ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வெளியிடும் திட்டம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். ‘மெர்சல்’ படம் வெளியாக ஒரே ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மீதியுள்ள போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும், டிரைலர் உருவாக்க தற்போது நேரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதேநேரத்தில் இந்த படத்தின் புரமோ [promo] வீடியோ அல்லது ஸ்டில்கள் தீபாவளி வரை தினமும் வெளிவரும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இதனால் டிரைலர் இல்லாமல் ஏமாற்றமடைந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு ஆறுதலாக உள்ளது.

Related posts

2016ல் YouTube பயணித்த பாதை ஓர் மேலோட்டம்.. – YouTube Rewind 2016

wpengine

TV நிகழ்ச்சி தொகுப்புகளில் இருந்து DD விடை பெற்றார்..

wpengine

Playboy மொடல் மதவழிபாட்டுத் தளத்தில் நிர்வாண கோலத்தில்.. [VIDEO]

wpengine