விளையாட்டு

டிரெஸ்சிங் ரூம் விவகாரம் – கிறிஸ் கெய்ல் மீது குவியும் புகார்



டிரெஸ்சிங் ரூம்மில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கெய்ல் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிரூபரிடம் வில்லங்கமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் தற்போது முடிந்துள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

இவர் கடந்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியின் போது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது அம்லமாகியுள்ளது.

இந்தத் தொடரில் உதவி செய்வதற்காக ஒவ்வொரு அணிக்கும் ஒரு பெண் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நியமிக்கப்பட்ட பெண் டிரெஸ்சிங் ரூம் வந்த போது, டவல் உடன் நின்று கொண்டிருந்த கெய்ல் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலாளரிடம் அவர் அப்போது புகார் கூறியுள்ளார்.

ஆனால் இது தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்காமல் ’பெண் ஊழியர்களிடன் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று மின்னஞ்சல் மட்டும் அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த அவுஸ்திரேலிய பணிப்பெண்ணின் புகாரை கிறிஸ் கெய்ல் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

wpengine

மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தானிடம் தோற்றது இலங்கை அணி..

wpengine

இசுறு உதானவின் விசேட விக்கெட் தடயத்தினால் Rajshahi Kings அபார வெற்றி…

wpengine