உள்நாட்டு செய்திகள்

டிரான் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனு இன்று விசாரணைக்கு.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனு இன்று(28) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக டிரான் அலஸ்சை கைது செய்ய உத்தரவிட்டிருந்தமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமைகள் மீறல் மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான எவா வனசுந்தர, அனில் குணரத்ன மற்றும் பிரசன்ன ஜயவர்தன உள்ளிட்ட நீதிபதிகள் குழு மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சுனாமி மீள்கட்டுமான பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் உருவாக்கப்பட்ட ராடா நிறுவனத்தில் ரூபா 200 மில்லியன் மோசடி இடம்பெற்றமை தொடர்பில் இவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“வெசாக்” தினம் சர்வதேச விடுமுறையாக பிரகடனம்

wpengine

இலங்கையின் கடன் சுமையினை குறைக்க 04 நாடுகள் முன்னின்று ஆதரவு..

wpengine

​மேலும் 117 பேர் குணமடைந்தனர்

wpengine