உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸ் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி. (UPDATE)


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(02) வழங்கிய தீர்ப்பினை அடுத்து முன்னாள் பா.உறுப்பினர் அலஸ் எதிர்வரும் நவம்பர் 10ம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————————-

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் விளக்கமறியலில்…

(Nov 2, 2016 @ 13:20)

ராடா நிறுவனத்தின் ஊடாக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மவ்பிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளருமான டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய, ஜயன்த டயஸ் சமரசிங்க உள்ளிட்ட மூவரையும் நவம்பர் மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரதான சந்தேகபர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் பிணை வழங்குமாறு டிரான் அலஸ் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கூறியிருந்தார்.

விடயங்களை ஆராய்நத நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, சந்தேகநபர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related posts

கடன்களில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது!- வொய்ஸ் ஒப் அமெரிக்கா

wpengine

மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

wpengine

விஜித ஹேரத்தின் தாயார் மரணம்

wpengine