உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டிப்பர் வாகனம் மற்றும் ரயில் மோதியதில் பலர் படுகாயம்


வனவாசல பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் புறக்கோட்டை – ரம்புக்கன ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மேற்படி விபத்தில், ரயில் மிதிபலகையில் தொங்கி கொண்டு வந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரயிலுடன் மோதுண்ட டிப்பர் வாகனத்தில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விபத்துக்குள்ளான  டிப்பர் பாதுகாப்பற்ற கடவையில் சென்றுள்ளமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலம் தொடரும் – லக்ஷ்மன்

wpengine

திருப்பேன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பரவல்…

wpengine

இன்று 16 மணிநேர நீர் விநியோகத் தடை

wpengine