உலக செய்திகள்

டிட்லி புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக உயர்வு…


ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பல்லாயிரக்கணக்கான வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 2,770 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரோமானியாவின் முதல் பெண் பிரதமர்…

wpengine

ஹமாஸ் குறித்து ஐநா தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை – வாக்கெடுப்பை தவிர்த்தது அவுஸ்திரேலியா..!

wpengine

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம் – 20 பேர் காயம்…

wpengine