உலக செய்திகள்

டிக்டாக் இற்கு நிரந்தரத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – சீனா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் செயலி உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிரந்தரமாகத்தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தியா – சீனாவுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலை அடுத்து, இந்தியா சீனா நாட்டில் ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

அதாவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் பொது ஒழுங்குக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சீனா நாட்டின் ஆப்களை தடைவிதிப்பதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இவை மீண்டும் இந்தியாவுகுள் நுழையவுள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த 50 செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 

Related posts

துபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

wpengine

கனடாவின் ஹொக்கி அணி வீரர்கள் 13 பேர் பலி…

wpengine

பிரித்தானிய அரசியின் கணவரும் இளவரசருமான பிலிப் அரச பணிகளில் இருந்து ஓய்வு..

wpengine