விளையாட்டு

டாப் 1௦ தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின்



ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 4-ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 7-ம் இடத்திலும், கேப்டன் தோனி 8-ம் இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 18-ம் இடத்திற்கு வந்துள்ளார்.

டிவில்லியர்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரை விட 42 புள்ளிகள் குறைவாக உள்ள சங்கக்காரா 2-ம் இடத்தில் உள்ளார். ஆம்லா, விராட் கோலி, தில்ஷன், வில்லியம்சன், ஷிகர் தவான், தோனி, ராஸ் டெய்லர், கிளென் மேக்ஸ்வெல் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

பந்துவீச்சு பிரிவில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டாப்-10 பட்டியலில் நுழைந்துள்ளார். அவர் தனது பழைய தரநிலையில் இருந்து 2 இடங்கள் முன்னேறி தற்போது 10-ம் இடத்தில் இருக்கிறார். முகமது ஷமி 12-ம் இடத்தில் உள்ளார்.

Related posts

இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்துவது தான் எமது குறி

wpengine

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் கிரிக்கெட் சாதனையினை புதிப்பித்து முன்னிலையில்..

wpengine

முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோதுகின்றன…

wpengine