உள்நாட்டு செய்திகள்

டாக்டர். கிரிஸ் நொனிஸ்சுக்கு பொலிஸ் அழைப்பாணை



பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் டாக்டர். கிரிஸ் நொனிஸ்ஸை ஜூலை 18 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றின் மேரி ஜெனி வர்மா என்ற 80 வயதுடைய பெண் ஒருவர் மீது மே மாதம் 16 ஆம் திகதி தவறான வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டு அச்சுறுத்தியமை தொடர்பில் குறித்த பெண்ணால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நேற்று (14) கிரிஸ் நொனிஸிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இருப்பினும் கிரிஸ் நொனிஸிற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியதுடன், கிரிஸ் நொனிஸிற்கு சுகயீனம் காரணமாகவே அவர் வருகைத் தரவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மஞ்சள் காய்ச்சல்.

wpengine

சிறுவர்கள் இருவருக்கு கொரோனா: 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்

wpengine

7 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலுக்கு..

wpengine