ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர்…



(FASTNEWS|COLOMBO) பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

நாட்டில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆராய்வது, நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல் அறிவது, மக்களின் கோரிக்கைகள், மாநிலங்களின் வளர்ச்சிக்கான பணிகள் என எண்ணற்ற பணிகளில் ஓய்வின்றி உழைக்கின்றனர்.

இப்படிபட்ட பணிகளுக்கு நடுவில், பூடான் நாட்டின் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியான சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரிகிறார். 41 வயதாகும் லோட்டே கடந்த 2018ம் ஆண்டு 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பூடான் நாட்டை ஆளும் இவர், ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். வங்காள தேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் லோட்டே மருத்துவ பயிற்சி பெற்றவர். தான் பயின்ற கல்வியும், பெற்ற பயிற்சியும் மக்களுக்கு உதவும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக அற்பணிப்பு உணர்வுடன் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமைகளில் டாக்டராக பணியாற்றுகிறார்.

என் உயிர் இருக்கும் வரை இந்த பணியை தொடர்வேன் எனவும் வாரத்தில் 7 நாட்களும் இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை என வருந்துகிறேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Image result for bhutan prime minister Lotay Tshering

Image result for bhutan prime minister is a doctor

Related posts

ஒபாமா பற்றி ட்விட்டரில் ஜோக் வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சரின் மனைவி பகிரங்க மன்னிப்பு

wpengine

சஜித்தை பிரதமராக நியமிக்க ஏற்பாடு

wpengine

விளாடிமிர் புடினை விமர்சனம் செய்த ஊடகவியலாளர் மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

wpengine