உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரரை கைது செய்ய பல காவற்துறை குழுக்கள் – பிரதி காவற்துறைமா அதிபர்..



பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் காவற்துறையில் வாக்குமூலம் வழங்குவதை தவிர்த்து வரும் நிலையில், அவரை கைது செய்து விசாரணை செய்வதற்காக தற்போது பல காவற்துறை குழுக்கள் செயல்பட்டு வருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

நீதிமன்ற அவமதிப்பு, காவற்துறையினரை அச்சுறுத்தியமை மற்றும் இன ரீதியான முறுகல்களை தோற்றுவிக்கும் விதமான கருத்துக்களை வெளியிடல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே ஞானசார தேரரை கைது செய்ய உள்ளதாகவும், அவர் சுகயீனம் காரணமாக உள்ளார் என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)

Related posts

இலங்கை – அமெரிக்கா படைகளுக்கிடையில் முதல்முறையாக பாதுகாப்பு கலந்துரையாடல்.

wpengine

ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை

wpengine

சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு

wpengine