ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞானசார தேரருக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை…


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் இதயத் துடிப்பு வேகத்தில் பிரச்சினைக் காணப்படுவதால், அவருக்கான சத்திர சிகிச்சை கடந்த 13ம் திகதி மேற்கொள்ளப்பட இருந்த நிலையில், தேரரின் இதயத் துடிப்புத் தொடர்பில் 48 மணி நேரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே அவரது சத்திர சிகிச்சைக்கான திகதி குறிப்பிடப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் அவரது சத்திர சிகிச்சைகள் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை பொதுபல சேனா அமைப்பு மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாய்களையும் விட்டு வைக்காத ‘கொரோனா’

wpengine

அமெரிக்காவில் இளம் மாணவியின் உயிரைப் பறித்த ‘கேக்’!

wpengine

சுஜித் மீட்கப்படுவது தாமதமாவது ஏன்? 10 முக்கிய தகவல்கள் வெளியாகின [VIDEO]

wpengine