ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர் சம்பிக்க இடமளிக்கவில்லை…



கடந்த ஆட்சியின் போது அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் தொடர்புபட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாமைக்கு காரணம் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் தலையீட்டினால் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது சட்டத்தினை அமுல் படுத்துமாறு அமைச்சரவை குழுவும், அரச கட்சிக் குழுவும் கோரியிருந்த நிலையில், அதனைத் தடுத்து ஞானசார தேரருக்காக முன்னிருந்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரது மதவாதமும், அளுத்கம கலவரத்தின் போது நடந்து கொண்ட விதத்தினையும் நோக்கின், அண்மையில் கண்டி – திகன,தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு அமைச்சர் பக்கம் சந்தேகம் வெளியிடுவதினை யாராலும் தடுக்க முடியாதொன்றே என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு

wpengine

அமைச்சரின் அழைப்பின் பேரில் மஹிந்த – மைத்ரி சந்திப்பு.. (Photos)

wpengine

ரவியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட மஹிந்த

wpengine