உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை வழங்குமாறு உத்தரவு



(FASTNEWS | COLOMBO) – பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, இந்த மீள் நினைவூட்டல் உத்தரவினை இன்று(05) பிறப்பித்தார்.

இஸ்லாம் மார்க்கம் மற்றும் அல்குர்ஆன் ஆகியவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மானால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஞானசார தேரருக்கு எதிரான இந்த வழக்கினை குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிலியந்தலை துப்பாக்கிப் பிரயோகம் – கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

wpengine

மேலும் 32 பேர் கைது

wpengine

ரூ.5,000 கொடுப்பனவை பெறும் பயனாளிகள்

wpengine