கேளிக்கை

ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம்…


பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

அவர்கள் இந்து முறைப்படி இன்று மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். .

அதன்படி நேற்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாதிரியார் முன்னிலையில் மண ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.

இந்த திருமணத்தையொட்டி அரண்மனை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததுடன், யாரும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களும் செல்போன் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

Related posts

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் முன்னணி நடிகரின் மகள்…

wpengine

மும்பையில் பிரபல நடிகை ரகசிய திருமணம் – ரஷ்ய காதலரை மணந்தார்…

wpengine

பிரபல நடிகை ஆக்சா சுதாரி விபச்சார கைதியாக பொலிஸ் கைது – (VIDEO)

wpengine