கேளிக்கை

ஜோதிகா படத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் உறவினர்…



ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் காற்றின் மொழி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் ஏ.எச்.காஷிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

`நாச்சியார்’ படத்திற்கு பிறகு ஜோதிகா அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். `தும்ஹரி சூளு’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்திற்கு `காற்றின் மொழி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.

போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள், கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.எச்.காஷிப் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய உறவினர் எனவும், காஷிப் இதற்கு முன்பாக பல இசை ஆல்பங்களை உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எனது அன்பிற்குரிய ஒரேயொரு மச்சி’க்கு வாழ்த்துக்கள் கோடி – நாமல்

wpengine

கோஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மாவுக்கு எதிராக நோட்டீஸ்..

wpengine

தள்ளிப்போகும் `2.0’…

wpengine