உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜே.வி.பி அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..



நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை தராவிடின் நாடு முழுவதிலும் தொழிற்சங்கங்களது ஆதரவுடன் பாரிய போராட்டங்களை செய்யவுள்ளதாக ஜே.வி.பி அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(04) நடைபெற்ற போது, இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நிலையில் ஜே.வி.பி இதனை வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பாணந்துறை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி, இருவர் மாயம்…

wpengine

ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

wpengine

வாகன சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை..

wpengine