உள்நாட்டு செய்திகள்

ஜெலக்னெட் குச்சிகளுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலக்னெட் வெடி மருந்து குச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை நேரியகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் நேற்றிரவு 7 மணியளவில் வழிமறித்த இராணுவம், அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது பேருந்துக்குள்ளிருந்து ஜெலக்னெட் வெடி மருந்து குச்சிகள் மீட்டுள்ளது.

இதனையடுத்து அவற்றை மீட்ட இராணுவத்தினர் குறித்த வெடிமருந்து குச்சிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டில் தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 824 ஆக உயர்வு [UPDATE]

wpengine

ஸ்ரீலங்கன் விமானசேவை தொடர்பிலான விசாரணை இன்று

wpengine

இன்று முதல் வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் திட்டம் அமுலுக்கு..

wpengine