உள்நாட்டு செய்திகள்

ஜெயில் அதிகாரிகளுக்கு வேலை பிழைத்தது – வெலிக்கட நாய்களின் பாதுக்காப்பின் கீழ்


சிறைச்சாலையில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நாய்களை பயன்படுத்த சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எல்சேசன், ஜேர்மன்செபர்ட், லெம்பிரடோ போன்ற வகையான நாய்களை கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த போதை பொருள் பாவனையை கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்காக பொலிஸாரினால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை பயன்படுத்தப் போவதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் புனரமைப்பு ,இந்து மதம் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைச்சாலைக்குள் இருக்கும் பாதாள உலக குழுவினராலேயே இந்த போதை வியாபாரம் சிறைச்சாலைக்குள் இடம்பெறுவதாகவும், இதற்கு துணைபோகும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளால் பாதாள உலக குழுக்கள் வழிநடத்தப்படுவது தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,

இந்த குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ரணில் – மைத்திரி தலைமையில் எதிர்கால அரசியல் குறித்து விசேட சந்திப்பு ; முக்கிய எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்பு

Azeem Kilabdeen

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம்

wpengine

இலங்கைக்கான விமான சேவைகள் குறித்து முன்னணி நிறுவனங்கள் அதிரடி முடிவு

wpengine