உள்நாட்டு செய்திகள்

ஜுன் மாதம் முதல் வட மாகாணத்தில் மின் விநியோகம் தடை..



ஜுன் மாதம் 2 ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த மின் விநியோகத்தடையானது, ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

(rizmira)

Related posts

மழையுடன் கூடிய காலநிலை இன்று(02) இரவிலிருந்து சிறிது அதிகரிப்பு…

wpengine

நாடு திரும்பும் கோட்டாபயவுக்கு நாமலின் வீட்டுக்கு அருகே பாதுகாப்பான வீடு!

wpengine

தேசத்தின் மனசாட்சி இன்று சிறிகொத்தவின் மனசாட்சியா – விமல்

wpengine