உள்நாட்டு செய்திகள்

ஜாலிய விக்ரமசூரியவுக்கு நீதிமன்ற பிடியாணை..



அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய  இன்று(17) நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்ற வகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறிது காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மருத்துவத் தேவைக்காக வௌிநாடு செல்வதற்கான அனுமதியும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்து.

8 வாரங்கள் வௌிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்னவினால் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகததன் காரணமாகவே அவருக்கு எதிராக இன்று(17) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

#rizmira

Related posts

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

wpengine

நடைமுறையிலுள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் சீட்டு.

wpengine

கோட்டாபய தொடர்பில் வெளியாகிய செய்தி பொய்யானது…

wpengine