உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஜல்லிக்கட்டு விவகாரம் – மு.க ஸ்டாலின் கைது…



தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், திரைதுறையினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று(20) ரயில் மறிப்பு போராட்டம் நடத்தும் என அறிவித்திருந்தது.

அதன்படி திமுக வின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தமிழகமெங்கும் அந்த கட்சியினர் ரயில் நிலையங்களில் ரயில் மறிப்பு போராட்டத்தில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி திமுகவின் செயல் தலைவரும், தமிழகத்தின் எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட அவரையும், அவருடன் இருந்த ஏராளமான தி.மு.கவினரையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளார்கள்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

wpengine

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில்..

wpengine

மேலும் 28 பேர் குணமடைந்தனர்

wpengine