உலக செய்திகள்

ஜப்பான் வழியாக 2-வது ஏவுகணையை ஏவிய வடகொரியா..



வடகொரியா இரண்டாவது முறையாக ஜப்பான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ் ஏவுகணை இடைப்பட்ட தூரம் சென்று தாக்கக் கூடிய திறம் படைத்தது என அமெரிக்காவுக்கான பசிபிக் கமாண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து சென்று பசிபிக் கடலில் விழுந்தது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. ஏவுகணை வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டது என பசிபிக் கமாண்ட் நிறுவன அதிகாரி தேவ் பென்காம் தெரிவித்தார்.

வடகொரியா சமீபத்தில் 6-வதுதடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பாகிஸ்தான் அரசு நிர்வாகத்துக்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல்..

wpengine

ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் விளாடிமிர் புதின்…

wpengine

அயர்லாந்தின் பிரதி பிரதமர் இராஜினாமா…

wpengine