உலக செய்திகள்

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து 11 பேர் உயிரிழப்பு…



ஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் 16 முதியோர்கள் தங்கியிருந்தனர். இந்த இல்லத்தில் நேற்று(31) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்த முதியோர் அனைவரும் வெளியேறினர். இருப்பினும் தீ மளமளவெனப் பரவியதால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானதுடன் 8 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 5 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தீ விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

2024 இல் போட்டியிடுவேன்

wpengine

ஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று

wpengine

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine