உலக செய்திகள்

ஜப்பானில் கடும் வெப்பம் காரணமாக 65 பேர் உயிரிழப்பு…


ஜப்பான் கிழக்கு ஆசியப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் அங்கு வீசி வரும் அனல் காற்று காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 ஆம் திகதி முதல் தற்போது வரை வெயில் காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

டொக்கியோ நகருக்கு அருகில் உள்ள குமகாயா நகரில் நேற்று (23) வெப்பநிலை மிக அதிகமாக காணப்பட்டதாகவும் அது 41.1 செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

”ஜப்பானில் ஏற்படும் சராசரி வெப்பநிலையை விட 12 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படுகிறது. எரியும் வெப்பத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள போதுமான உபகரணங்களை பயன்படுத்தகொள்ள வேண்டும் என ஜப்பான் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

10,000 க்கும் அதிகமானவர்கள் அதிக வெப்பநிலை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலண்டனில் அமைந்துள்ள கம்டன் சந்தைத் தொகுதியில் பாரிய தீ விபத்து…

wpengine

மீண்டும் காட்டுத் தீ – அவசர காலநிலை பிரகடனம்

wpengine

08 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை(18) முதல் ஈராக் – சிரியா விமானப் பயணம் ஆரம்பம்…

wpengine