உலக செய்திகள்விசேட செய்தி

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் பதிவு – இதுவர சுனாமி எச்சரிக்கை இல்லை.


ஜப்பானின் கிழக்குப் பகுதியில் காலை 11.50 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா பகுதியில் மையம் கெண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்தால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகின் ஏற்படும் நிலநடுக்கங்களில் 20 சதவீத நிலநடுக்கங்கள் ஜப்பானில் நிகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தலைநகர் காத்மாண்டுவில் இன்று 5.5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு..

wpengine

இன்றைய பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

wpengine

தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில்…

wpengine