உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கே உள்ளது



(FASTNEWS | COLOMBO) – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று(08) நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதியாவதற்கு தனக்கு அதிர்ஷ்டமில்லை. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடுமையானவர் இல்லை எனவும், இதனால் அவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றும் கட்சிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும்

wpengine

தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நாளைய(12) தினத்திற்குள் முழுமையாக அகற்ற நடவவடிக்கை

wpengine

மதுபானம் கொடுத்துவிட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 4 மாணவர்கள்..!

wpengine