உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி ஜேர்மன் நோக்கி விஜயம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜேர்மனுக்கான விஜயத்தை ஆரம்பிக்க உள்ளார்.
ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார்.

இதன் முதல் கட்டமாக ஜனாதிபதி இன்று ஜேர்மனுக்கு செல்லவுள்ளார்.

ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மோர்கலின் அழைப்பை அடுத்தே குறித்த இந்த விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதித் தடையை நீக்குதல் போன்ற விடயங்களுக்காக ஜேர்மனியின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

wpengine

‘மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

wpengine

ஜனாதிபதியின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

wpengine