உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேசியா விஜயம்…



இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான சௌபாக்கியமிக்க பிராந்தியமாக மாற்றியமைத்தல், கூட்டு ஒத்துழைப்பை பலப்படுத்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(06) ஜகார்த்தாவுக்கு செல்கிறார்.

இந்து சமுத்திர சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகள் அமைப்பின் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வில் அரச தலைவர்களின் மாநாடு நாளை(07) இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ளது. இதற்கான தீர்மானம் 2015ம் ஆண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்போது அங்கு சென்றுள்ளார் என அரசாங்கத தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சமுத்திரக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வர்த்தகம், முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல், கடற்றொழில் நடவடிக்கை குறித்த முகாமைத்துவம், இடர்களைக் கட்டுப்படுத்துல், கல்வி,விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலாசார விடயங்களை பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அநுராதபுரம் சதொச களஞ்சியசாலையின் முகாமையாளர் வெளிநாடு செல்ல தடை !

wpengine

சம்மாந்துறை பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்..!

wpengine

இந்தியாவின் நிவாரணக் கப்பல் இலங்கை வந்தடைந்தது..

wpengine