உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(22) நியூயோர்க் விஜயம்…


ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(22) நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நாளை மறுதினம்(24) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் பிரதான கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு இணையாக எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

Related posts

கஞ்சிபானி இம்ரானின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட ஆறு பேர் கைது

wpengine

ஆஸி தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்…

wpengine

CID இன் புதிய பணிப்பாளர் நியமனம்

wpengine