உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மாளிகையை சுற்றி நிர்மாணிக்கப்படும் இரும்பு வேலிகள் :பாதுகாப்பு கடமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மக்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி மாளிகையை சுற்றி இரும்பு வேலிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அரசாங்க தரப்பினரின் பாதுகாப்புக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் ஆயிரத்து 500 பேரும் இராணுவத்தை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.

இவர்களை தவிர வடமேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் பொலிஸ் நிலையங்களில் இருந்து 3 ஆயிரம் பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அரண்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு…

wpengine

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு

wpengine

மேலும் 417 பேர் குணமடைந்தனர்

wpengine