உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள்ள உள்ள ஜனாதிபதி மாளிகைக்குச் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சிலர் இன்று சென்றுள்ளனர்.

அங்கு காணப்படும் தொல்பொருள் ரீதியான பொருள்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்காகவே அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கும் இளைஞர்களுடன் உரையாட திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலர் வந்து செல்லுகின்றனர்.

இந்த நிலையில், அங்குள்ள பெறுமதியான பொருள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சில பெறுமதியானப் பொருள்கள் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஊரடங்கு உத்தரவை தளர்த்தியமைக்கான நோக்கம்

wpengine

நிலவும் வறட்சியான காலநிலை – அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள்….

wpengine

இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

wpengine