உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் விசேட கலந்துரையாடல்…



சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாளை(25) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இக் கலந்துரையாடலின் போது சாதகமான முடிவு எட்டப்படும் என்று மருத்துவர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த கல்லூரிக்கான புதிய அனுமதிகளை கோரும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறும் தமது சங்கம் கோரியுள்ளதாக, அதன் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்லூரியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் பங்கேற்கவுள்ளதுடன் ஜனாதிபதியுடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடல் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

இலங்கை தொடரை கைப்பற்றியதன் மூலம் கனவு நனவாகியுள்ளது – மிஸ்பா

wpengine

அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine

மே மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…

wpengine