உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் – அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள்..



அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடவுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மாரம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிலிருந்நது 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் நேற்று(01) பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விற்பனையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத விற்பனையாளர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று(01) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கங்காராம விகாரையின் வருடாந்த பெரஹரா நிகழ்வு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை…

wpengine

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

wpengine