உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1237 முறைப்பாடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(21) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1237 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1184 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் மற்றும் 44 வேறு முறைப்பாடுகளும் பபதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று(21) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் கடற்படை தளபதிக்கு கலாநிதிப்பட்டம்

wpengine

கடுமையான வெப்பத்தினால் ஒருவர் பலி

News Editor

இரண்டாவது விசேட நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை இன்று(22)

wpengine