உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தென் கொரியாவுக்கு விஜயம்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 28ம் திகதி தென் கொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தென் கொரியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், ஜனாதிபதியின் குறித்த இந்த விஜயம் அமையவுள்ளது.

இதேவேளை, அவர் எதிர்வரும் 29ம் திகதி தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக, வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் தென் கொரியாவுக்கு இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தென்கொரியாவின் வர்த்தகக் குழுவினர் மற்றும் அங்கு வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க திட்டமிட்டுள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

####

Related posts

ஷங்கிரி – லா ஹோட்டலுக்கு காலவரையின்றி பூட்டு…

wpengine

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான அறிவிப்பு நாளை…

wpengine

மற்றுமொரு கொரோனா கொத்தணி : 80 பேருக்கு தொற்று

wpengine