உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத்தை விசேட மேல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு…


ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி, காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு, விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(10), நோட்டீஸ் விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ரீஜன்சி ஹோட்டல் நிர்மாணப் பணிகளின் போது, 4 மில்லியன் ரூபாயை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, இவ்வாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

காமினி செனரத், பியதாஸ குடாபாலகே, நில் பண்டார ஹபுஹின்ன மற்றும் லசந்த பண்டார ஆகியோருக்கே இவ்வாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளிடம் வேண்டுகோள்..

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine

புதிய பயண தடை மீதான டிரம்ப்பின் உத்தரவுக்கு மீண்டும் தடை…

wpengine