உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் இன்று(14) விசேட உரை…



(FASTNEWS|COLOMBO) கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பின் பேரில் கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(14) ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.

சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும் எனும் தொனிப்பொருளில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு நாளை வரை நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

சிகிச்சைகளை தவிர்ப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது – அரசு திட்டவட்டம்

wpengine

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களாக கௌரவ (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவு

Azeem Kilabdeen