ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதி என்னை பதவி விலக்க முன்னர் நானே இராஜினாமா செய்கிறேன்… பொலிஸ்மா அதிபர் இராஜினாமா…?


ஜனாதிபதிக்கு எதிரான கொலை சதித்திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி அவரை பதவி விலக்குவதற்கு முன்னர் தாமாகவே பதவியை இராஜினாமா செய்ய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோர் மீது கொலை சதித்திட்டம் தீட்டியமை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்தே அவர் இவ்வாறு பதவியை இராஜினாமா செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியின் பாதுகாப்பு துறையின் தலைவராகவுள்ள எஸ்.எம்.விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகின்றது.

இதனால் எதிர்வரும் வாரங்களில் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படலாமென கூறப்பட்டு வந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர தாமாகவே பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் கண்ணில் உபாதை… நடந்தது என்ன?

wpengine

‘மொட்டுக்கு’ ஆதரவளிக்கச் சென்றமை குறித்து பாலித தெவரப்பெரும கருத்து..

wpengine

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹிலாரி செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

wpengine