உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணை முறி விசாரணைகளை அவதானிக்க, அர்ஜூன் மகேந்திரனுக்கு அனுமதி…



சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தி வரும் விசாரணைகளை அவதானிப்பதற்கு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த விசாரணைகளை அவதானிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அர்ஜூன் மகேந்திரன் கோரியிருந்ததற்கு அமையவே இச்சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் மகேந்திரன் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வாவினால் இது தொடர்பிலான கோரிக்கை ஆணைக்குழுவின் எதிரில் முன்வைக்கப்பட்டது.

ஆணைக்குழுச் சட்டத்தின் 16(1) இலக்க சரத்தின் அடிப்படையில் விசாரணைகளை அவதானிப்பதற்கு அர்ஜூன் மகேந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதிச் சபையின் செயலாளர் எச்.ஏ. கருணாரட்ன நேற்று(21) சாட்சியமளித்திருந்தார்.

இதன் அடிப்படையில் நேற்று(21) நடைபெற்ற விசாரணைகளின் போது முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையில் அர்ஜூன் மகேந்திரன் ஆணைக்குழுவில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

சரத் பென்சேகாவை உடன் கைது செய்யுமாறு தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு கோரிக்கை

wpengine

தமிழ் எம்.பிக்களை சீண்டிப் பார்ப்பதை உடனடியாக நிறுத்துங்கள் – தெற்கு அரசியல்வாதிகளுக்கு வலியுறுத்தும் சந்திரிக்கா..!

wpengine

தபால் மூல வாக்களிப்பு; விண்ணப்பங்கள் நாளை முதல்

wpengine