உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அஜித் டயஸ்



(FASTNEWS|COLOMBO) – 2015 – 2018 ஆம் ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று(15) ஸ்ரீ லங்கா வான் சேவையின் முன்னாள் தலைவர் அஜித் டயஸ் முன்னிலையாகவுள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தொட்டை மத்தள வானுர்தி தளத்தின் களஞ்சியசாலை ஒன்றில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை மற்றும் அரச நிறுவனங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை, கல்வியமைச்சின் பாடசாலை சீருடைக்கு பதிலாக வவுச்சர் வழங்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பான முறைப்பாடு, இலங்கை மின்சார சபை தொடர்பில் கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வழங்கியுள்ள சட்டபூர்வமற்ற நியமனங்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் இன்று(15) விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிரதமருடன் தமக்கு முரண்பாடு இல்லை – மத்திய வங்கி ஆளுநர்

wpengine

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

wpengine

கண்ணீர் புகை வீச்சால் உயிரிழந்ததாக கூறப்படும் நபரின் மரணத்திற்கான காரணம் வெளியானது…!

News Editor