உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகளின் கால எல்லை நீடிப்பு…



(FASTNEWS-COLOMBO) அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகளின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கை கள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ஆணைக்குழுவிற்கு கிடைத்த 270 முறைபாடுகளில் 15 முறைப்பாடுகள், ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக, விசேட பொலிஸ் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவிற்கு இதுவரை 450க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Related posts

பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

நிதி மோசடி புலனாய்விற்கான உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரங்கன ஹேரத் தலைமை…

wpengine