ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியின் மகளுக்கு புதிய அரசியல் பதவி?



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் சந்திரசிறி சூரியஆராச்சி நேற்றைய தினம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இராஜினாமா செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1989 ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 வருடங்களின் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

2007ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்காக பொதுஜன ஐக்கிய முன்னணியில் சந்திரசிறி சூரியஆராச்சி இணைந்தார்.

இந்த நிலையில் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் வெற்றிடம் காணப்படுகிறது. அந்தப் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

45 ஹெக்டெயர் பரப்பில் ஹம்பாந்தோட்டையில் செயற்கை தீவு : அரசாங்கத்தின் நிலைப்பாடு

wpengine

நான் நிலைமையினை கட்டுப்படுத்தவே சம்பவ இடத்திற்கு சென்றேன் – தயாசிறி…

wpengine

சட்டத்தை மீறிய முன்னாள் நீதி அமைச்சர்

wpengine