உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட உயர்பதவிகள் 04 பேர் ஜனாதிபதியால் நியமிப்பு..



அரச உயர்பதவிகள் 04 இற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்புகள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராகவும், கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், புதிய இராணுவ தளபதியாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் கிரிஸாந்த டி சில்வா பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவி உயர்வு பெற்றுள்ளதோடு, புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை…

wpengine

கலந்துரையாடல் வெற்றி

wpengine

போதைப்பொருள் பாவனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை…

wpengine