ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலாளர்களை நிராகரித்த அமைச்சர்கள்!



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சு செயலாளர்கள் சிலரை துறைசார் அமைச்சர்கள் வேண்டாம் என நிராகரித்துள்ளனர்.

அண்மையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதற்கு சமாந்தரமாக அமைச்சு செயலாளர் பதவிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு ஜனாதிபதியினால் மூன்று அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சின் செயலாளர்களை அந்த மூன்று அமைச்சர்களும் நிராகரித்துள்ளனர்.

இது குறித்து மூன்று அமைச்சர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே இவ்வாறு அமைச்சுச் செயலாளர்களை நிராகரித்துள்ளனர்.

அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாக, அமைச்சின் செயலாளர்கள் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சுப் பதவியினை எந்நேரமும் துறக்கத் தயார் – கபீர் அரசுக்கு அழுத்தம்

wpengine

ஒரே பாலின திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டது.. (Photos)

wpengine

உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கப்போகும் ஒபாமா மகள்.

wpengine