உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியால் ரவி கருணாநாயக்கவின் மூன்று அமைச்சரவை பத்திரங்களை நிராகரிப்பு


வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தாக்கல் செய்த மூன்று அமைச்சரவை பத்திரங்கள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அவற்றில் ஒன்று  விசும்பாயவை தனது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம்.
இரண்டாவது அமைச்சரவை பத்திரம்  தனது ஊழியர் குழுவின் பிரதான அதிகாரியை நியமிக்க  அனுமதி கோரியதாகவும்.
மூன்றாவது அமைச்சரவை பத்திரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும்இலங்கை யாத்திரீகர்ளின் நலன் காக்கும் சபையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அனுமதி கோரியிருந்தமை.
ஜனாதிபதி மேற்கூறிய மூன்று அமைச்சரவை பத்திரங்களையும் நிராகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
விசும்பாய இலங்கைக்கு வரும் வெளிநாட்டு அரச தலைவர்களை தங்க வைக்க தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு மட்டுமே  ஊழியர்கள் தலைமை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விசேட போக்குவரத்து சேவை

wpengine

ஸ்ரீ.பொ.முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் 11 அன்று

wpengine

கடந்தாண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்

wpengine