உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கு பிரதமரிடம் இருந்து சென்ற முக்கிய செய்தி!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று காலை ஜனாதிபதியிடம் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

Related posts

ரூ.25,000 தண்டப்பணம் குறித்து முச்சக்கரவண்டி சாரதிகளும் எச்சரிக்கை.

wpengine

நாடளாவிய ரீதியில் உள்ளகப் பயிற்சி பெறும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

IMF கடன் கிடைக்கும் திகதி அறிவிப்பு

News Editor