கேளிக்கை

ஜனவரி 12-ம் திகதி “பைரவா” இலங்கையில் வெளியாகாது..



‘பைரவா’ ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல் முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் வருகிற ஜனவரி 12-ம் திகதி வெளியாவதாக இருந்தது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இலங்கையில் மட்டும் இப்படம் ஒருநாள் தாமதாக அதாவது ஜனவரி 13-ம் திகதி வெளியாகவுள்ளது.இதனால் இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

எதிர்வரும் 12 ஆம் திகதி பௌர்ணமி தினம் ஆகையால் , அன்றைய தினம் பைரவா வௌியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சசித்திரவின் மற்றுமோர் புதிய படைப்பு.

wpengine

எனது அன்பிற்குரிய ஒரேயொரு மச்சி’க்கு வாழ்த்துக்கள் கோடி – நாமல்

wpengine

சம்பளம் பற்றிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் – ஓவியா…

wpengine