உள்நாட்டு செய்திகள்

ஜனக பண்டார இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்



முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

மாத்தளை திம்புல்கமுவ பிரதேசத்தில் கடந்த 1999ம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித படுகொலை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்பய்பட்டிருந்தார்.

கடந்த மாதம் 20ம் திகதி சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். சந்தேக நபரை மருத்துவ சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் மாத்தளை மேலதிக நீதவான் சம்பத் கமகே பணித்திருந்தார்.

மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே செய்த முறைப்பாட்டுக்கு அமைய, புலனாய்வுப் பிரிவினர் ஜனக பண்டார தென்னக்கோனை கைது செய்திருந்தனர்.

ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எதிராக மேலும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மன்னாரில் வெள்ள நீரை வெளியேற்றக் கோரி போராட்டம்

wpengine

உதயங்கவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை [ UPDATE]

wpengine

‘ஸ்திரமான ஆட்சியே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும்’ புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine