வணிகம்

சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க தீர்மானம்…



பெரும்போகத்திலிருந்து சோளத்திற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு சோளச் செய்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக அடுத்த பெரும் போகத்திலிருந்து இந்த உத்தரவாத விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உத்தரவாத விலையின் கீழ் மரவள்ளிக்கிழங்கை இலங்கை ஹதபிம அதிகார சபை கொள்வனவு செய்து வருகின்றது.

இதன்படி நாளாந்தம், இரண்டு தொன் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது.

கொள்வனவு செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கை நியாயமான விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வருடங்கள் 200 பழமை வாய்ந்த ரயில் பயணச்சீட்டு மாறுகிறது

wpengine

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி

wpengine

சீனாவிடமிருந்து கடன் வாங்க தீர்மானம்

wpengine